🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Tamil Nadu

Sri Varadaraja Perumal Temple (Vedavalli Thayar), Sankararama Nallur

ஶ்ரீ வரதராஜர் (வேதவல்லி தாயார்) திருக்கோயில், சங்கரராம நல்லூர்

Perumāḷ (Moolavar)Sri Varadaraja Perumal
ThāyārVedavalli Thayar (Sridevi and Bhudevi)
LocationSankararama Nallur, Tamil Nadu

Sthala Mahātmyam

Set on the southern bank of the Amaravathi river amid lush greenery, this Vaishnava temple enshrines the Lord beneath an Ekathala Vimana. In the sanctum Perumal grants darshan as Sri Varadaraja, standing in wedding posture with Sridevi and Bhudevi, while Vedavalli Thayar graces a separate shrine in a seated, beautiful form. Uniquely, the Thayar is worshipped with vilva leaves, the leaf beloved of her elder brother, offered to his dear sister Vedavalli. A Shiva temple stands nearby; as both shrines were built in the same Chola era, the town was once called 'Sankararama Nallur', joining Sankaran (Shiva) and Raman (Vishnu). Being a Saiva-Vaishnava linked kshetram, vilva is used in the Thayar's worship. On a mandapa pillar at the entrance, Sri Veera Anjaneya faces the Vayu (north-west) corner while looking toward Sri Varadaraja, thus honouring both his father Vayu and Lord Narayana at once; a Sudarshana Chakra is engraved above him, and sage Vyasa is said to have worshipped him. Hanuman Jayanthi, Saturday worship for strength, Vaikunta Ekadasi, and the Saturday utsavar worship for marital harmony are celebrated; devotees pray here for the removal of obstacles to marriage.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; அமராவதி ஆற்றின் தென்கரையில், பசுமைமிகு சூழலில் அமைந்துள்ள இந்த வைணவத் திருத்தலத்தில் 'ஏகதள' விமானத்தின் கீழுள்ள கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருமணக்கோலத்தில் ஸ்ரீ வரதராஜர் நின்றிருந்த திருக்கோலமாக அருட்காட்சியளித்திட, தனி சன்னதியில் நம் வேதவல்லி தாயார் அமர்ந்த கோலத்தில் அழகு திருக்காட்சியளிக்கிறாள். அண்ணனுக்கு பிடித்த வில்வ இலையை கொண்டு, அவர் அன்பு தங்கை வேதவல்லிக்கு பூஜை செய்யப்படுவது தலவிசேஷம். (இத்தலத்திற்கு அருகில் சிவன் ஸ்தலம் ஒன்றுள்ளது. சோழர்களால், இவ்விரு ஆலயங்களும் ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டதால், முற்காலத்தில் இவ்வூர், நம் ஈசனின் திருப்பெயரான "சங்கரன்", நம் பெருமாளின் திருநாமமான "ராமன்" என்ற பெயர்களை இணைத்து "சங்கரராம நல்லூர்" என்றழைக்கட்டதாம். சைவ, வைணவ இணைப்புத்தலமென்பதால், தாயாருக்கு வில்வம் கொண்டு பூஜை செய்யப்படுகிறது) கோயிலின் முகப்பில் உள்ள மண்டபத்தின் தூணில் காட்சிதரும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர், வாயு மூலையை பார்த்தபடி ஸ்ரீவரதராஜரை நோக்கி உள்ளது மற்றுமொரு தல விசேஷம். இதன் மூலம் தன் தந்தைக்கும், இறைவன் நாராயணருக்கும் ஒரே நேரத்தில் மரியாதை செலுத்தும் வகையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது அருமை. இவரது திருவுருவத்திற்கு மேலே 'சுதர்சன சக்கரம்' பொறிக்கப்பட்டுள்ளது. வியாச முனிவர், இவரை வழிபட்டு அருள்பெற்றிருக்கிறாராம். (அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுவதும், உடலும், உள்ளமும் வலிமைபெற வீர ஆஞ்சநேயருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடும் தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்) நம் திருமாலுக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும் மற்றும் தம்பதியர் கருத்தொற்றுமை மேன்மையுற நடைபெறும் சனிக்கிழமை உற்சவர் வழிபாடும் தலபிரசித்தம். தம்பதியர் சமேதராக கல்யாண திருக்கோலத்தில் இறைவன் காட்சியளிப்பதால், இவரை உளமார வழிபட திருமணத் தடைகள் நீங்கப்பெற்று விரைவில் நல்வாழ்க்கை துணை அமையும் என்பது நம்பிக்கை). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳🙏🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீர்தன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams