🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Puducherry

Sri Thothathri Perumal (Deivanayaka Perumal) Temple, Thirubhuvanai

ஶ்ரீ தோத்தாத்திரி பெருமாள் (தெய்வநாயகப் பெருமாள்) திருக்கோயில்

Perumāḷ (Moolavar)Sri Thothathri Perumal (Deivanayaka Perumal)
ThāyārVaraguna Mangai Thayar (Sri Perundevi)
LocationThirubhuvanai, Villianur, Puducherry, Puducherry

Sthala Mahātmyam

Built during the reign of Parantaka Chola I (c. 907-950 CE), this Vaishnava temple enshrines Perumal in the sanctum, flanked by His consorts and seated in the gracious sukhasana posture, one leg folded and the other resting down, with a gentle smile. In a separate sannidhi, Lakshmi Devi is seated as Sri Varaguna Mangai Thayar, for whom a special Friday worship is held for prosperity; she also bears the name Sri Perundevi, and without floral adornment she indeed appears fittingly as the great goddess. The utsavar is called Sri Varadaraja Perumal. The kshetram is special as a place where Guru (Jupiter) and Sukra (Venus) are united, and it is counted among the five 'Pancha Krishnaranya' sthalams (Adi Thiruvarangam, Thirukovilur, Thiruvallikeni, Thiruvandhipuram and Thirubhuvanai). Its walls bear exquisite sculptures of scenes from the Ramayana, Mahabharata and Bhagavatam. Once called 'Veeranarayana Vinnagaram' after the Chola's title Veeranarayanan, and 'Thirubhuvanai Mahadevi Chaturvedimangalam' after his first queen, the temple is now under the central archaeology department. The Kalappradosham and garbha-dosha nivarthi worship are notable observances.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; முதலாம் பராந்தக சோழர் (907~950 ஆண்டுகளின்) காலத்தில் கட்டப்பட்ட, இந்த வைணவ திருத்தலத்தின் கருவறையில் நம் பெருமாள், தேவியர் இருபுறமும் உடனிருக்க, ஒரு காலை மடக்கி, மறு காலை தொங்கவிட்டு சுகாசனதிருக்கோலத்தில் மந்தகாச புன்னகையுடன் அருட்காட்சியளிப்பதை காணப்பரவசம். தனி சன்னதியில் நம் லக்ஷ்மிதேவி, ஸ்ரீ வரகுண மங்கை தாயார் எனும் திருநாமத்துடன் அமர்ந்த கோலத்தில் அழகுத்திருக்காட்சியளிக்கிறாள். வளம் சிறக்க தாயாருக்கு நடைபெறும் வெள்ளிக்கிழமை வழிபாடு தலவிசேஷம். (இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கும் நம் தாயாருக்கு 'ஸ்ரீ பெருந்தேவி' எனும் மற்றுமொரு திருநாமமும் உண்டு. 🤔மலர் அலங்காரம் ஏதுமின்றி தாயாரை காணும்போது, அத்திருப்பெயருக்கு ஏற்றார்போல, பெருந்தேவியாகவே அழகுத்திருக்காட்சியளிக்கிறாள்) உற்சவர் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் எனும் திருநாமத்துடன் அழைக்கப்படுகின்றார். குருவும், சுக்கிரனும் ஐக்கியமான திருத்தலம் என்பது சிறப்பு. (ஆதி திருவரங்கம், திருக்கோவிலூர், திருவல்லிக்கேணி, திருவந்திபுரம், திருபுவனை ஆகிம) 'பஞ்ச கிருஷ்ணாரண்ய' தலங்களில் ஒன்று என்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும். இராமாயணம், மகாபாரதம்,பாகவத காட்சிகளின் சிற்ப வடிவங்கள் அற்புதமாக வடிக்கப்பட்ட திருக்கோயில் என்பது மற்றுமொரு தலச்சிறப்பாகும். முற்காலத்தில், பராந்தக சோழரின் விருதுப்பெயரான வீர நாராயணன் எனும் பெயரில், 'வீரநாராயண விண்ணகரம்' என்றழைக்கப்பட்ட இத்தலம், அம்மன்னரின் முதல் மனைவி பெயரால் 'திருபுவனை மகாதேவிச் சதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. ( உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத சிறப்புமிக்க இத்திருத்தலம், மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது) பெருமாள் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறும் களப்பிரதோஷம் மற்றும் கர்ப்ப தோஷ நிவர்த்தி வழிபாடு மற்றுமொரு தலவிசேஷமாகும்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams