🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Alappuzha

Sri Imayavarappa Perumal Temple, Thiruchengunroor

ஶ்ரீ இமயவரப்ப பெருமாள் திருக்கோயில், திருச்செங்குன்றூர்

Perumāḷ (Moolavar)Sri Imayavarappan
ThāyārSengamalavalli Thayar
LocationThiruchengunroor (Chengunroor), Thiruvalla, Alappuzha, Kerala

Sthala Mahātmyam

This ancient riverside temple on the banks of the Chittaru, a tributary of the sacred Pamba, is the 82nd of the 108 Divya Desams, sanctified by the mangalasasanam of Nammazhwar. Beneath the Jegajothi vimanam the Lord grants darshan as Sri Imayavarappan, standing and facing west, while His consort Sengamalavalli Nachiyar graces a separate shrine. A cherished specialty is that Nammazhwar's verse weaves together all three sacred names, the town Chengunroor, the river Chittaru and the Lord Imayavarappan. By tradition Dharmar, eldest of the Pandavas, worshipped here seeking peace of mind after repenting the untruth he uttered to weaken Dronacharya during the Kurukshetra war; hence the temple is also revered as Dharmar Kovil, Dharma Kshetram and Dharma Ambalam. Vaikunta Ekadasi and the Thiruvonam festival are celebrated as the principal utsavams. Devotees believe that heartfelt repentance and worship of the Lord here surely bestow liberation from one's faults and lasting inner peace.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; "எங்கள் செல்சார்வு யாமுடையமுதம் இமையவரப்பன் என்னப்பன் பொங்கு மூவுலகும் படைத்தளிதழிக்கும் பொருந்து மூவுருவன் எம்மருவன் செங்கயலுகளும் தேம்பனை புடைசூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு அங்கு அமர்கின்ற ஆதியானல்லால் யாவர் மற்று என் அமர்துணையே" என, நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம், 108-திவ்ய தேசங்களில் 82-ஆவது வைணவத்திருத்தலமாகும். புனித நதியான பம்பை ஆறறின் துணை நதியான 'சித்தார்' எனும் சிற்றாற்றின் கரையில் அமைந்துள்ள, மிகவும் பழமைவாய்ந்த, சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருத்தலத்தில், ஜெகஜோதி விமானத்தின் கீழுள்ள கருவறையில் நம் திருமால், ஸ்ரீ இமயவரப்பன் எனும் திருநாமத்துடன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். செங்கமவல்லி நாச்சியார், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள். ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; குருச்சேத்திரப்போரின்போது, அரச குருவான துரோணாச்சாரியாரை தோல்வியுறச்செய்வதற்காக அவரது வலிமையைக் குறைக்க பொய் சொன்ன, (உண்மைத்தன்மைக்கு பெயர் பெற்ற) பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர், பின் மனம் வருந்தி, மன அமைதி வேண்டி புதுப்பித்து வழிபட்ட கோயில் என்பதால், இத்திருத்தலம் 'தருமர் கோவில்', 'தரும ஷேத்திரம்', 'தரும அம்பலம்' என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. (இத்திருக்கோயில் அமைந்துள்ள நகரம் செங்குன்றூர். கோயிலின் அருகே ஓடும் நதியின் பெயர் சிற்றாறு. பெருமாளின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார், இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்யும்போது ஊர், ஆறு, இறைவனின் திருநாமம் என, மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்) வைகுண்ட ஏகாதசி மற்றும் திரவோணத்திருவிழா இத்திருத்தலத்தில் முக்கிய விழாக்களாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இத்தல இறைவனிடம், செய்த தவறுக்கு உளமார மனம் வருந்தி வழிபடுதலால், நிச்சயம் விமோச்சனமும், மனநிம்மதியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

← All Other Divya Desams