Sri Kanichi Perumal Temple, Kanichi
ஶ்ரீ கணிச்சி பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Recently renovated with fine kainkaryam, this small Vaishnava shrine enshrines Lord Thirumal as Sri Kanichi Perumal, standing gracefully in the sanctum with his consorts on either side. Revered as the family deity (kuladeivam) of the people of the surrounding villages, the Lord of this sthalam is said to have manifested here on his own (swayambhu) many centuries ago, emerging from the earth in the form of a small linga. A distinctive observance of this temple is the abhishekam worship offered to the swayambhu Swami, positioned before the processional idols of the Perumal and his consort, prayed to so that long-delayed auspicious events in the household may soon come to pass happily. For wellbeing and flourishing prosperity, the evening worship conducted on every Saturday of the Purattasi month is renowned at this sthalam. Little known to devotees from outside yet cherished locally, the temple draws those seeking the removal of obstacles and the fulfilment of family aspirations through the grace of Sri Kanichi Perumal.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இச்சிறு வைணவ திருத்தலத்தின் கருவறையில் நம் திருமால், ஸ்ரீ கணிச்சி பெருமாள் எனும் திருநாமத்துடன் தேவியர் இருபுறமும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் அழகு அருட்காட்சியளிக்கிறார். சுற்றுப்பட்டு கிராம மக்களின் குலதெய்வமாக போற்றப்படும் இத்திருத்தல பெருமாள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பூமியுனுளிருந்து (சிறு லிங்கம் போல) சுயம்புவாக வெளிப்பட்டவராம். இல்லங்களில் தள்ளிப்போகும் சுபநிகழ்வுகள் விரைவில் இனிதே நடந்தேறிட, (பெருமாள் தம்பதியர் விக்ரகத்திற்கு முன்புள்ள) சுயம்புவான சுவாமிக்கு நடைபெறும் அபிஷேக வழிபாடு தலவிசேஷம். நலம் சிறக்க, வளம் செழிக்க புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் நடைபெறும் மாலை வழிபாடு தலப்பிரசித்தம்). 🙏🏻 ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻*பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*




