Sri (Kalyana) Lakshmi Narasimhar Temple, Narasingapuram
ஶ்ரீ (கல்யாண) லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம்
Sthala Mahātmyam
This ancient Vaishnava temple at Narasingapuram, built by the Pallavas and reckoned about 1500 years old, enshrines Sri Lakshmi Narasimhar in a rare and tender form. Some seven and a half feet tall, the Lord is seated with His right foot placed down and left leg folded, bearing a gentle smile, with Thayar Mahalakshmi seated upon His left lap; He embraces her with His left hand while His right hand shows the abhaya hasta. Ordinarily in Lakshmi Narasimhar shrines the Goddess sits looking to the side, but here the Thayar faces the devotees and lovingly embraces Narasimhar, a rare vision that gives the Lord His additional name 'Kalyana Lakshmi Narasimhar.' Worshipping this divine couple is believed to remove the fear of enemies, bestow the grace of Lakshmi, and strengthen harmony between husband and wife. In a separate east-facing shrine to the southwest, Sri Marakathavalli Thayar graces devotees, five feet tall and seated with abhaya hasta. Renovated by the Cholas and Vijayanagara kings, the temple is dear to those born under Swati nakshatra, and the thirumanjana abhishekam performed for the divine couple on Swati day is especially sacred.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; ஏழரை அடி உயரத்துடன் வலது திருப்பாதத்தை கீழே வைத்து, இடது திருக்காலை மடித்துஅமர்ந்து புன்முறுவல் திருமுகத்துடன், தாயார் மஹாலக்ஷ்மி தேவியை தனது இடது திருமடியில் அமரவைத்து, இடது திருக்கரத்தால் தாயாரை அரவணைத்தபடி, வலது திருக்கார்த்தினை அபயஹஸ்தமாக காட்டி திருஅருட்காட்சிதரும் (சுமார் 1500-ஆண்டுகள் பழமையானவரான) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சுவாமியை காணப்பரவசம். (🤔பொதுவாக, லக்ஷ்மி நரசிம்மர் கோயில்களில் நம் லக்ஷ்மிதேவி பக்கவாட்டில் பார்த்தபடி அமர்ந்திருப்பார். ஆனால், இத்திருத்தலத்தில் தாயார் வரும் பக்தர்களை நோக்கியபடியும், அன்புடன் நரசிம்மரை அணைத்தபடியும் அமர்ந்திருப்பது அபூர்வ திருக்காட்சியாகும். அதனாலேயே, இத்தல லக்ஷ்மி நரசிம்மருக்கு 'கல்யாண லக்ஷ்மி நரசிம்மர்' என்றொரு திருப்பெயரும் உண்டு. இந்த இறைதம்பதியரை உளமார தரிசித்திட சத்ரு பயம் அகலுவதோடு, லக்ஷ்மி கடாட்சமும் சேர்ந்து கிடைத்திடும் என்பதும், கணவன் மனைவி கருத்தொற்றுமையும் மேலோங்கும் என்பதும் ஐதீகம்) ஆலயத்தின் தென் மேற்கிலுள்ள கிழக்கு நோக்கிய தனி சன்னதியில், 5-அடி உயரமாக அபய ஹஸ்தம் கொண்டு அமர்ந்து அருள்புரியும் ஸ்ரீ மரகதவல்லி தாயார் அழகு. பல்லவர்களால் கட்டப்பட்ட இந்த பழமைமிகு வைணவ திருத்தலம், சோழர்கள் மற்றும் விஜயநகர அரசர்கள் காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளதாம். சுவாதி நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய இத்திருத்தலத்தில், சுவாதி நட்சத்திரத்தன்று இறை தம்பதியருக்கு நடைபெறும் திருமஞ்சன அபிஷேகம் வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் லக்ஷ்மி நரசிம்மம் சரணம் சரணம் பிரபத்யே! 🇮🇳👍🏻*பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*




