Sri Prasanna Venkatachalapathy Swamy Temple, Perumalmalai Kundru
ஶ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி சுவாமி திருக்கோயில்
Sthala Mahātmyam
Perched over 1,000 feet high on Perumal Malai near the Kolli and Pachai hill ranges, this hilltop shrine enshrines the Lord as Sri Prasanna Venkatachalapathy, gracing devotees facing east with Sridevi and Bhudevi. Believed to have been built in the 11th century by a grandson of Rajaraja Chola, the temple is reached by climbing 1,564 steps or by a five-kilometre motorable hill road. Revered as a form of Malayappa Swamy of immense power and sanctity, devotees affectionately call this sacred hill 'Then Tirupati' (the Tirupati of the South). The pillars of the temple mandapam bear sculptures of Sri Narasimha and Sri Ramanuja, proclaiming the artistic glory of the Chola era. Purattasi Saturdays draw great crowds and festivity. Among its most special observances are the Pournami (full-moon) girivalam around the hill's base and the Vaikasi Visakam chariot festival, when the ther processes majestically around the Perumal hill.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்: கொல்லிமலை மற்றும் பச்சை மலைத்தொடரின் அருகில், சுமார் 1000-அடிகளுக்கும் மேற்பட்ட உயரத்தில் அமைந்துள்ள (பெருமாள் மலை குன்று) ஆலயத்தின் கருவறையில் நம் வேங்கடவன், ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி எனும் திருநாமத்துடன் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். (11-ஆம் நூற்றாண்டில், ராஜராஜ சோழரின் பேரனால் கட்டப்பட்டதாக அறியப்படும் இத்திருத்தலத்தின் இறைவனை தரிசனம் காண, 1564-படிகள் கடந்தும் செல்லலாம். 5-கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலைப்பாதையில் வாகனங்களிலும் செல்லலாம்) அளப்பரிய சக்தியும், சாந்நித்தியமும் கொண்ட மலையப்ப சுவாமியாக உறையும் இறைவனின் இத்திருத்தலத்தினை "தென் திருப்பதி" என்றழைத்து வணங்குகிறார்கள் பக்தர்கள். ( ஆலயத்தின் மண்டப தூண்களில் ஸ்ரீ நரசிம்மர், ராமானுஜர் என வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் யாவும் சோழர்காலத்திற்க்கே உரிய சிறப்புக்களை பறைசாற்றுகின்றன) புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரும் விழாக்கோலம் காணும் இத்திருத்தலத்தின் அடிவாரத்தில் நடைபெறும் பவுர்ணமி கிரிவல நிகழ்வும் மற்றும் இந்த பெருமாள்மலை மலையை சுற்றி தேர் பவனி வரும் வைகாசி விசாக தேர்த்திருவிழா நிகழ்வும் வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*




