Sri Sara Narayana Perumal Temple, Thiruvadhigai
ஶ்ரீ ஹேமாம்புஜவல்லித் தாயார் சமேத ஶ்ரீ சர நாராயணப் பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Over 2000 years old and recently renovated, this Vaishnava temple at Thiruvadhigai enshrines Sri Thirumal beneath the Nalina vimana as Sri Sara Narayana Perumal, standing in a wedding posture with Sridevi Thayar (without Bhudevi). A thala speciality is that his entire thirumeni is made of saligrama. Thayar and Yoga Narasimha grace devotees in separate shrines. Puranic tradition holds that when Shiva sought to burn the Tripura asuras, Vishnu himself became the arrow (saram), hence the name Sri Sara Narayana. While Narasimha is usually seen standing or seated, here he grants the rare darshan reclining upon Adisesha in a 'yoga-sayana' posture with Thayar near his feet, foremost among the temple's glories. After destroying Vakrasura at Thiruvakkarai, the Lord is said to have come here and reclined. Mangalasasanam was offered 700 years ago by Nigamanta Mahadesika, and the Amavasya worship for removing misdeeds is renowned; tradition also holds that Arjuna worshipped here for expiation after the Kurukshetra war. Each year in Vaikasi, on the day the nearby Veerattaneswarar temple enacts the burning of 'Tripuram', the Lord proceeds on the Garuda vahana bearing the arrow to grant the saram, a most special event.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இந்த வைணவ திருத்தலத்தில், நளினக விமானத்தின்கீழுள்ள கருவறையில் நம் திருமால், ஸ்ரீ சர நாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன், (பூதேவி இல்லாமல், ஸ்ரீதேவி தாயாருடன் திருமண திருக்கோலமாக) நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். (இவர் திருமேனி முழுவதும் சாளக்கிராமத்தால் ஆனது என்பது தலவிசேஷம்) தாயார் மற்றும் யோக நரசிம்மர் தனித்தனி சன்னதியில் திருவருள்புரிகின்றனர். ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; சிவபெருமான், திரிபுர அசுரர்களை எரித்திட, விஷ்ணுவே சரம் (அம்பு) ஆனார் என்பதாலேயே, ஸ்ரீ சரநாரயணர் என்றழைக்கப்படுகின்றாராம். பொதுவாக நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் அருட்காட்சியளிக்கும் ஸ்ரீ நரசிம்மர், இத்திருத்தலத்தில் காண்பதற்கு அரிய காட்சியாக ஆதிசேஷன் மேல் 'யோக சயன திருக்கோலத்தில்' (அவர் திருவடியின் அருகே தாயார் இருக்க) அருள்பாலிப்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும். (திருவக்கரையில், வக்ராசுரனை அழித்துவிட்டு, அதன் பரிகாரத்திற்காக இத்திருத்தலம் வந்து சயனத்திருக்கிறாராம்) 700-ஆண்டுகளுக்கு முன்பு, நிகமாந்த மகாதேசிகரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலத்தில், தீவினைகள் அகல நடைபெறும் அமாவாசை வழிபாடு தலபிரசித்தம். (மற்றுமொரு தல வரலாற்றின்படி; அர்ஜூன், குருச்சேத்திரப் போர் முடிந்து, பிராயச்சித்தத்திற்காக இத்தல இறைவனை வழிபட்டுச்சென்றதாக தலபுராணம் கூறுகிறது) பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் ஆலயம் அருகே, சிறப்புமிக்க இப்பெருமாள் தலம் அமைந்துள்ளது. ( ஸ்ரீதேவி, பூதேவியுடன் அழகுத்திருக்காட்சியளிக்கும் உற்சவருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு மற்றுமொரு தலவிசேஷம்) பெருமாள் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், (திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் 'திரிபுரம்' எரிக்கும் திருவிழா நாளில்) கருட வாகனத்தில் பெருமாள், சரத்துடன் எழுந்தருளி சரம் கொடுக்கும் நிகழ்வு வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*




