🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Chengalpattu

Sri Varadaraja Perumal (Kamala Varadaraja) Temple, Arasar Koyil

ஶ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஶ்ரீ வரதராஜப்பெருமாள் திருக்கோயில்

Perumāḷ (Moolavar)Varadaraja Perumal (Kamala Varadaraja)
ThāyārPerundevi Thayar (Sundara Mahalakshmi / Adi Mahalakshmi)
LocationArasar Koyil, Madhurantakam, Chengalpattu, Tamil Nadu

Sthala Mahātmyam

Over 2000 years old and recently renovated, this Vaishnava temple at Arasar Koyil enshrines Sri Varadaraja standing with his Devis on either side, and he is regarded as elder to the Varadaraja Perumal of Kanchipuram. Revered as a 'Kubera Sampath Shakti' temple, its supreme glory is the Perundevi Thayar, Sri Sundara Mahalakshmi, who graces devotees seated in a separate shrine with six fingers on her right foot, radiantly beautiful as her name suggests. This wondrous six-fingered form is honoured as the original source-form of all the 64 avatars of Lakshmi, and so the Thayar here is also called Sri Adi Mahalakshmi. Six is the number of Shukra (Venus); temple tradition holds that Shukra worshipped this Perundevi and was blessed, and it is believed that even today Shukra comes every Friday to worship Mahalakshmi, either formless or in some form such as a human or a peacock. Little known beyond local devotees, this very ancient shrine received renovations in the times of the Pallavas and Cholas, and the sculptures and inscriptions carved on its mandapa pillars are wonderful.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இந்த வைணவ திருத்தலத்தின் கருவறையில், தேவியர் இருபுறமும் உடனிருக்க நின்ற நிலையில் அருட்காட்சியளிக்கும் ஸ்ரீ வரதராஜர், காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளைவிட மூத்தவராக கருதப்படுகின்றார். 'குபேர சம்பத் சக்தி' கோவிலாக போற்றப்படும், *இத்திருத்தலத்தின் பெரும்சிறப்பே* தனி சன்னதியில், (zoom செய்து காணவும்) *வலது காலில்* *ஆறு விரல்களுடன்* பெயருக்கேற்றார்போல *பேரழகாய்* *அமர்ந்த* *கோலத்தில்* *திருக்காட்சியளிக்கும்* பெருந்தேவியாகிய *ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மி* *தாயார்தான்.* (ஆறு விரல்கள் கொண்ட இந்த அற்புதமான திருவடிவம்தான் அனைத்துவகையான 64 லக்ஷ்மி அவதாரங்களின் ஆதி மூல வடிவமாக போற்றப்படுகிறது. அதனாலேயே, இத்தல தாயாரை ஸ்ரீ ஆதி மஹாலக்ஷ்மி என்றும் அழைக்கின்றனர்) ஆறு என்பது சுக்கிரனின் எண். ஸ்ரீ சுக்கிரன், இத்தல பெருந்தேவியை வழிபட்டு பேறுபெற்றார் என்கிறது தலவரலாறு. (இன்றளவும், இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் தாய் மஹாலக்ஷ்மியை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாட்களிலும் அரூபமாகவோ அல்லது மனிதர், மயில் உட்பட ஏதாவது ஒரு ரூபத்திலேயோ, சுக்கிரன் வந்து வழிபட்டுச்செல்வதாக ஐதீகம்) உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத மிகவும் பழமைவாய்ந்த பல ஆலயங்ளுள், பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட இத்திருக்கோயிலும் ஒன்று . ஆலயத்தின் மண்டப தூண்களில் வடிக்கப்பட்டிருக்கும் சிற்பங்களும், கல்வெட்டுகளும் அருமை! அற்புதம்!) 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🙏🏻ஓம் ஸ்ரீ சுந்தர மஹாலக்ஷ்மி தாயே போற்றி! போற்றி! 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams