Sri Prasanna Venkatesa Perumal Temple (Then Thirupathi, Thiruvaikundagiri), Thirumalai Vaiyavur
ஶ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில், திருமலைவையாவூர்
Sthala Mahātmyam
Perched atop a small, beautiful hill of 500 steps, this ancient Vaishnava shrine is revered as 'Then Thirupathi' (Southern Tirupati) and 'Thiruvaikundagiri.' In the sanctum, Lord Thirumal graces as Sri Prasanna Venkatesa Perumal in a majestic royal posture bearing a sengol (scepter), adorned with two Mahalakshmis upon His chest, sahasranama garlands and a dasavatara ottiyanam, with Adisesha behind. A distinctive custom is the 'nethra darshan' offered every Thursday morning, when the Lord is seen without any decoration. Thayar Alarmelmangai graces a separate shrine, seated. Worship of Sri Lakshmi Varahar is another specialty: as at Tirumala, since the Lord revealed His Varaha form to Garuda here, devotees worship Sri Lakshmi Varahar before the moolavar. The name 'Prasanna' (appearing within the mind) recalls a Thondaiman king to whom Venkatesa appeared inwardly bearing a scepter. Hanuman, carrying the Sanjeevi mountain to Lanka, is said to have worshipped here without setting it down, giving the place its name. Saturday worship of utsavar Srinivasar and Anjaneyar, and the Chithirai and Purattasi Brahmotsavams, are grandly celebrated.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; (500-படிகள் உடைய) அழகிய சிறு மலைக்குன்றின்மீது கட்டப்பட்ட, பழமைமிகு வைணவ திருத்தலத்தின் ஆலயத்தின் கருவறையில் நம் திருமால், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் எனும் திருநாமம் கொண்டு, செங்கோலுடன் ராஜகோலத்தில் அருட்காட்சியளிப்பதும், இவர் தனது இரு மார்புகளில் இரண்டு மஹாலக்ஷ்மிகளுடனும், சகஸ்ர நாம மாலைகள் மற்றும் தசாவதார ஒட்டியாணம் அணிந்து, திருவாசியில் ஆதிசேஷனுடன் திருக்காட்சியளிப்பதை காணப்பரவசம். (நம் பெருமாள், பிரதி வியாழக்கிழமை நாட்களின் காலை வேளையில், அலங்காரம் ஏதுமில்லாமல் 'நேத்திர தரிசனம்' தருவது தலவிசேஷம்) தாயார், தனி சன்னதியில் அமர்ந்த திருக்கோலமாய் அருள்பாலிக்கிறாள். ஸ்ரீ லக்ஷ்மி வராகர் வழிபாடு இத்திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பாகும். கருடனுக்கு, (இத்தலத்தில்) வராஹ உருவம் காட்டிய ஸ்ரீ லக்ஷ்மி வராகரை (திருப்பதி திருமலையை போல) முதலில் வழிபட்ட பின்னரே மூலவரை தரிசனம் காண்பது முறையாம். ( 'பிரசன்னம்' என்றால் மனதிற்குள் தோன்றுதல் எனப்பொருள்படும்) முற்காலத்தில், தொண்டைமான் மன்னர் ஒருவரின் மனக்கண் முன், திருமலை வெங்கடேச பெருமாள் தன் திருக்கரத்தில் செங்கோலுடன் அருட்காட்சியளித்ததின் நினைவாக கட்டப்பட்ட ஆலயம் இதுவாகும். (தன் கரத்தில் உள்ள சஞ்சீவி மலையை கீழே வைக்காமல், இத்தலத்தின் இறைவனுக்கு பூஜை செய்த ஸ்ரீஅனுமன்) ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; ஸ்ரீ அனுமன், சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச்செல்லும் வழியில், (தன் கரத்தில் உள்ள சஞ்சீவி மலையை கீழே வைத்திடாமல், வலது கரத்தில் உள்ள மலையை இடது கரத்தில் மாற்றி) இத்தலத்தில் ஸ்ரீ வராகருக்கும், ஸ்ரீ வெங்கடேசருக்கும் பூஜை செய்து வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு, 'திருமலை வையாவூர்' எனும் திருப்பெயர் உண்டானதாக தலவரலாறு கூறுகிறது. வளமும், நலமும் சிறக்க, ஸ்ரீ தேவி, பூதேவி சமேத உற்சவர் ஸ்ரீநிவாசர் மற்றும ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு தலபிரசித்தம். ( 'தென் திருப்பதி' என அழைக்கப்படும் இத்தலத்தில்) ராமானுஜர் சிறிது காலம் தங்கியிருந்து இறைவனை தரிசித்து செல்கையில், இச்சிறு மலைக்குன்றிற்கு "திருவைகுண்டகிரி" எனும் பெயரிட்டு அழைத்ததாக தலவரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாள் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் (திருப்பதி திருமலையில் நடைபெறுவதைப்போலவே) சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருக்கோவிலில், சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாக்கள் வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*





