Sri Lakshmi Narayana Perumal Temple, Madambakkam
ஶ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Recently renovated, this Vaishnava temple at Madambakkam enshrines Sri Narayana Perumal in a captivating form: he seats Sri Lakshmi Devi upon his left lap, embraces her with his left hand, shows the abhaya-hasta of protection to devotees with his right hand, and graces all with a gentle smile. The Goddess, resting in Thirumal's embrace, turns her face with shy modesty, and the exquisite sculpting of this divine couple invites devotees to behold it closely. The utsava murti, gracing devotees with Sridevi and Bhudevi, is likewise beautiful. The Thondai Mandalam region, comprising Kanchipuram, Thiruvallur and Chengalpattu districts, has many ancient Lakshmi Narayana temples, and this shrine, built by the Pallavas, is one of them. Though little known beyond local devotees, its Sri Anuman is especially revered, and the Saturday worship offered to him for health of body and mind is highly special. Monthly festivals are observed, and the sthala vriksha is the vilva tree. It is held that worshipping Narayana seated joyfully with Lakshmi blesses those awaiting marriage with a good partner and restores harmony to couples troubled by discord.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இந்த வைணவ திருத்தலத்தின் கருவறையில், ஸ்ரீ லக்ஷ்மிதேவியை தனது இடது திருமடியில் அமர்த்தி, இடது திருக்கரத்தினால் தேவியை அணைத்தவாறும், வலது திருக்கரத்தில் பக்தர்களை காத்தருளும் அபயஹஸ்த நிலை காட்டியும், புன்முறுவல் பூத்தவராய் அருட்காட்சியளிக்கும் நம் நாராயணப்பெருமாளின் திருமுகத்தினைக் காணப்பரவசம். (நம் திருமாலின் அரவணைப்பில், வெட்கம் கலந்த நாணத்துடன் காட்சிதரும் நம் திருமகளின் திருமுகம் அழகோ பேரழகு. இந்த அழகுத்தம்பதியரை சற்றே zoom செய்து காணுங்களேன். 🤔🙏🏻என்ன ஒரு அற்புதமான சிற்ப வடிப்பு) ஸ்ரீ தேவி, பூதேவியுடன் திரு அருட்காட்சியளிக்கும் உற்சவ மூர்த்தியும் பேரழகு. (தொண்டை மண்டலம் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் கோவில்கள் அதிகளவில் அமையப்பெற்றுள்ளன. இவையனைத்தும் மிகவும் பழமையான திருத்தலங்களாகும். அத்தகையான சிறப்புமிக்க ஆலயங்களுள், பல்லவர்களால் கட்டப்பட்ட இத்திருக்கோயிலும் ஒன்றாகும்) உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத தொன்மையான தலங்களுள் ஒன்றான இத்திருத்தலத்தின் ஸ்ரீ அனுமன் சிறப்பு பெற்றவராக திகழ்கின்றார். உடலும், உள்ளமும் நலமுடன் திகழ இவருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு வெகு விசேஷமாம். மாதம்தோறும் விழாக்கோலம் காணும் இத்திருத்தலத்தின் தலவிருட்சம் வில்வமரம். ஸ்ரீ லக்ஷ்மிதேவியோடு இணைந்து (மகிழ்வுடன்) காட்சிதரும் நாரயணரை தரிசித்து உளமார வழிபட, மணவாழ்க்கை எதிர்நோக்கியுள்ளவர்கள் நல்வாழ்க்கைத்துணை அமையப்பெறுவர் என்பதும், கருத்து வேறுபாடுகளால் நிம்மதியின்றி வாழ்ந்திடும் தம்பதியரின் கருத்தொற்றுமை மேன்மையுறும் என்பதும் நிச்சயமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*





