Sri Madhava Perumal (Aravinda Madhavan) Temple, Mylapore
ஶ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர்
Sthala Mahātmyam
About a thousand years old, this Vaishnava temple enshrines the Lord beneath the 'Ananda Nilai' vimanam, seated in a wedding posture (thirumana kolam) with His Devis on either side; in this bridal form He is also revered as Sri Kalyana Madhavan, while His consort Amirthavalli graces a separate shrine, seated. It is counted among the ancient sthalams where Mahalakshmi, parted from the Lord, was born and grew as a child before wedding Him. Tradition tells that at sage Bhrigu's prayer, Lakshmi Devi incarnated in the temple tirtha on a Masi Magam day as his daughter, grew as Sri Amirthavalli and married the Lord, the utsavar here being Sri Aravinda Madhavan. As the avatara sthalam of Peyazhwar, one of the first three azhwars, it is praised as a temple free of 'Kali dosha'. Revered for removing obstacles to marriage and restoring lost standing, it keeps festival splendour year round with Chithirai Brahmotsavam, Aadi Pooram, Navaratri, the Masi float festival, Rama Navami and the Panguni Thirukalyanam.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சுமார் 1000- ஆண்டுகள் பழமையான இந்த வைணவ திருத்தலத்தில், 'ஆனந்த நிலை' விமானத்தின் கீழுள்ள கருவறையில் நம் திருமால், தேவியர் இருபுறமும் உடனிருக்க, அமர்ந்த திரு(மண)க்கோலத்தில் அருட்காட்சி அளிக்கிறார். (திருமண கோலத்தில் காட்சிதரும் இறைவனுக்கு 'ஸ்ரீ கல்யாண மாதவன்' எனும் திருநாமமும் உண்டு) தனி சன்னதியில், நம் அமிர்தவல்லி தாயார் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறாள். (நம் மஹாலக்ஷ்மி தாயார், பல்வேறு புராண நிகழ்வுகளில் பெருமாளை பிரிந்து, குழந்தையாக பிறந்து, வளர்ந்து இறைவனை திருக்கரம் பிடித்த சில பழமையான தலங்களில் இத்திருத்தலமும் ஒன்று) ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; பிருகு முனிவரின் வேண்டுதலுக்காக ஸ்ரீ லக்ஷ்மிதேவி, பிருகு முனிவரின் மகளாக ஒரு மாசி மகத்தன்று இங்குள்ள தீர்த்தத்தில் அவதரித்து, ஸ்ரீ அமிர்தவல்லி எனும் திருப்பெயருடன் வளர்ந்து, பெருமாளை மணந்து, தம்பதி சமேதராக எழுந்தருளிய திருத்தலம் என்பது இத்தலச்சிறப்பாகும். (உற்சவர்; ஸ்ரீ அரவிந்த மாதவனாக, பெருமாள் இங்கு சிறப்பு பெறுகின்றார்) முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரின் அவதாரத்தலமான இத்தலம், 'கலிதோஷம்' இல்லாத திருத்தலமாக அழைக்கப்படுவது மற்றுமொரு தலச்சிறப்பாகும். (இத்திருக்கோயிலுக்கு அருகில், நம் ஈசனின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கபாலீஸ்வரர் ஆலயமும், பின்புறம் நம் பராசக்தியின் ஸ்ரீ முண்டகக்கண்ணியம்மன் கோவிலும் உள்ளது) (உளமார வழிபட) திருமணத்தடைகளை நீக்கி நல்வாழ்க்கை துணை அமையப்பெறும் தலமாகவும் மற்றும் இழந்த செல்வாக்குச் சிறப்புக்களை மீண்டும் கிடைக்கப்பெறும் தலமாகவும் போற்றப்படும் இத்திருக்கோயில், சித்திரையில் பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, மாசியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, பங்குனியில் திருக்கல்யாணம் என, வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் காண்கிறது). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*





