🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Chennai

Sri Saumya Damodara Perumal Temple (Amirthavalli Thayar), Villivakkam

ஶ்ரீ சௌமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம்

Perumāḷ (Moolavar)Sri Saumya Damodara Perumal
ThāyārAmirthavalli Thayar
LocationVillivakkam (Konnur / Vilvaranyam), Chennai, Tamil Nadu

Sthala Mahātmyam

Believed to have been built by the Pandyas around 800 years ago, this revered Vaishnava temple at Villivakkam (also known as Konnur, Vilvaranyam) enshrines the Lord standing beneath the Ananda Vimanam with his consorts. Devotees have for generations worshipped him as the child Krishna. Uniquely, both the moolavar and the utsavar bear the mark of a rope pressed into their waists. The legend recalls how Yashoda, to keep the infant Krishna from wandering, tied a rope around his waist and bound him to a mortar; the child dragged the mortar along and liberated two asuras, and the rope-mark left on his belly is reflected in the deities here. As 'thaamam' means rope and 'udaram' the belly, the Lord is named Damodara; and since 'saumya' means beauty, his smiling, graceful form gives him the name Saumya Damodara. Amirthavalli Thayar graces a separate sannidhi, seated. Remarkably, during the Thai month utsavam it is the Thayar, not the Lord, who appears in the Mohini avatar on the fourth day. Devotees pray here for childbirth and for children's learning; Krishna Jayanti is the great festival.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; பாண்டியர்களால், சுமார் 800-ஆண்டுகளுக்கும் முன் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த சிறப்புமிக்க வைணவத் திருத்தலத்தில், ஆனந்த விமானத்தின் கீழுள்ள கருவறையில் நம் பெருமாள், தேவியர் இருபுறமும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். (பக்தர்கள், காலம்காலமாக இத்திருத்தலத்தின் சுவாமியை குழந்தை கண்ணனாகவே பாவித்து வழிபடுகின்றனர்) மூலவர், உற்சவர் இருவரின் இடுப்பிலும் கயிறு அழுந்திய தடம் இருக்கிறது. புராண வரலாற்று நிகழ்வின்படி ஒரு சமயம், தாயார் யசோதை குழந்தை கிருஷ்ணர் வெளியில் செல்லாதபடி அவரது இடுப்பில் கயிறைச்சுற்றி, ஒரு உரலில் கட்டிவைத்துவிட்டார். ஆனாலும் கிருஷ்ணர் உரலையும் சேர்த்து இழுத்துச்சென்று இரண்டு அசுரர்களுக்கு விமோசனம் கொடுத்ததார். இவ்வாறு யசோதை கட்டிவிட்ட கயிறு அழுந்தியதால் கிருஷ்ணரின் வயிற்றில் தழும்பு உண்டானதின் அடிப்படையில் இத்திருத்தலத்தில், மூலவரும், உற்சவரும் இடுப்பில் கயிறு அழுந்திய தடத்துடன் அருட்காட்சி அளிக்கின்றனராம். ( "தாமம்" என்றால் கயிறு. "உதரம்" என்றால் வயிறு. எனவே, "தாமோதரன்" எனும் திருநாமம் பெற்ற இறைவன், ("சௌம்ய" என்றால் அழகு) இத்திருத்தலத்தில் புன்னகை ததும்ப அழகாக காட்சி தருவதால் "சௌம்ய தாமோதரனாக" அழகுத் திருக்காட்சியளிக்கிறார்) தனி சன்னதியில், அமிர்தவல்லி தாயார் அமர்ந்த நிலையில் அழகு அருட்காட்சியளிக்கிறாள். (தாருகாவனத்து ரிஷிகளின் கர்வத்தினை போக்கிட நம் திருமால், மோகினி அவதாரம் எடுத்தார். இதன் அடிப்படையில் பொதுவாக, பெருமாள் தலங்களில் திருவிழாக்களின்போது இறைவன் மோகினி அவதாரத்தில் காட்சி தருவார். ஆனால், இத்திருக்கோயிலில் தை மாதத்தில் நடக்கும் உற்சவத்தின் நான்காம் நாளில் நம் அமிர்தவல்லி தாயார் மோகினி அவதாரத்தில் திருக்காட்சி தருவது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்) தள்ளிப்போகும் மகப்பேறு விரைவில் நலமாக கிடைக்கப்பெறவும், குழந்தைச் செல்வங்கள் கல்வி கேள்வி ஞானங்களில் சிறந்து விளங்கிடவும் இத்தல இறைவனை உளமார வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. நம் பெருமாள் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறும் "கிருஷ்ண ஜெயந்தி" விழா வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams