Sri Adi Varaha Perumal Temple, Perumandur
ஶ்ரீ ஆதி வராகப்பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Little known beyond the locality, this ancient Vaishnava temple enshrines a majestic seven-foot form of Sri Adi Varaha Perumal, who stands with one divine foot upon Adisesha and the other upon the Earth, holding Bhudevi on His lap. Ambujavalli Thayar graces a separate sannidhi. The temple's specialty is that this Varaha Perumal, over 1,500 years old, is regarded as the single embodiment of all three Varaha forms: Adivarahar, Pralaya Varahar and Yagna Varahar. Legend relates that after slaying Hiranyaksha and rescuing the Earth, Varaha remained fierce, until sages and rishis knelt before Him in worship; pleased, He gave darshan with Bhudevi. Because great sages knelt (mandiyittu) here, the place was called 'Perumandiyur', later corrupted to Perumandur. The temple has no rajagopuram but a large flagstaff, and its mandapa roof bears an unusual carving of a serpent trying to swallow the moon. Worshipped as a Rahu-Ketu parihara sthalam, the Lord is invoked for solutions to land-related problems. Purattasi Saturdays and Vaikunta Ekadasi are its major festival occasions.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத இந்த பழமைமிகு வைணவ திருத்தலத்தின் கருவறையில் ஏழடி உயரத்தில், ஆதிசேஷன் மீது ஒரு திருவடியும், பூமியின் மீது ஒரு திருவடியும் வைத்து, பூதேவியை மடியில் இருத்திய திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கும் ஸ்ரீ ஆதி வராகப்பெருமாளை காணப்பரவசம். ஸ்ரீ அம்புஜவல்லி தாயார, தனி சன்னதியில் அருட்குடிகொண்டிருக்கிறாள். (நம் மஹாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான ஸ்ரீவராக சுவாமி) 'ஆதிவராகர்', 'பிரளய வராகர்', 'யக்ஞவராகர்' ஆகிய மூன்று வராக மூர்த்தங்களின் ஒரே அம்சமானவர் இந்த (சுமார் 1500-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவரான) பெரமண்டூர் வராகப்பெருமாள் என்பது தலச்சிறப்பாகும். ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி: பூமியை இம்சித்த இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து பூமியை மீட்டபோது வராகப்பெருமாள் உக்கிரமாக இருந்திட, அவரை சாந்தப்படுத்த எண்ணிய முனிவர்களும், ரிஷிகளும் அவர்முன் மண்டியிட்டு தொழுதிட, மனம் குளிர்ந்த வராக மூர்த்தி, பூதேவி சமேதராக அருட்காட்சியளித்ததாகவும், பெரும் முனிவர்களும், ரிஷிகளும் மண்டியிட்டு இறைவனை வழிபட்ட தலமாதலால் இத்திருத்தலம், முற்காலத்தில் 'பெருமண்டியூர்' என்றழைக்கப்பட்டு, காலப்போக்கில் அப்பெயர் மருவி, தற்போதைய பெருமண்டூர் என்றானதாக தலபுராணம் கூறுகிறது. (ராஜகோபுரம் இல்லாத, பெரிய கொடிமரம் கொண்ட இக்கோயில் மண்டபத்தின் மேற்கூரையில் பாம்பு ஒன்று சந்திரனை விழுங்க முயற்சிப்பதுபோல வித்தியாசமாக வடிக்கப்பட்டுள்ளது. 5-ஆம் புகைப்பட பதிவு) ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் வழிபடப்படும் இத்திருக்கோயிலின் இறைவனிடம் பூமி சம்மந்தப்பட்ட பிரச்சினைகளில் நல்ல தீர்வு காண உளமார வழிபடுதல் நிச்சயம் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை. பெருமாள் தம்பதியருக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்கள் மற்றும் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகியவை பெரும் திருவிழா காலங்களாகும்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*





