🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Villupuram

Sri Vaikundavasa Perumal Temple, Thiruvennainallur

ஶ்ரீ வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில்

Perumāḷ (Moolavar)Sri Vaikundavasa Perumal
ThāyārSri Janakavalli Thayar
LocationThiruvennainallur, Thiruvennainallur, Villupuram, Tamil Nadu

Sthala Mahātmyam

Believed to have been built in the 5th century and crowned with a five-tier rajagopuram, this ancient temple enshrines the Lord of the Seven Hills as Sri Vaikundavasa Perumal, standing with Sridevi and Bhudevi on either side. Formerly known as 'Sri Navaneethapura Kshetram', navaneetham meaning butter (vennai), the place-name later softened into Thiruvennainallur. As one of the Panchakrishnaranya kshetrams, its foremost glory is that the Lord also grants darshan here as Sri Krishna. Sri Mahalakshmi is seated beautifully in a separate shrine as Sri Janakavalli Thayar, while in another sannidhi Sri Andal stands in exquisite form; the temple is also noted, unusually, for being a very ancient shrine without a Garudazhwar. Tradition tells that the Lord descended from Vaikuntam on a Purattasi-month Saturday to protect his devotee, the sage Soundalya, destroying the asuras and granting the sage his darshan. The temple preserves inscriptions of Rajaraja I, Kulothunga Chola, Rajaraja II and other kings, lies under the care of the Ahobila Mutt, and has recently been well renovated. Saturday worship for health and prosperity is its foremost speciality.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அறியப்படும் ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட இத்திருத்தலத்தின் கருவறையில், ஸ்ரீதேவி, பூதேவியர் இருபுறமும் உடனிருக்க நம் வேங்கடவன், ஸ்ரீ வைகுண்டவாசப்பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். முற்காலத்தில் 'ஸ்ரீநவநீதபுரஷேத்திரம்' என்றழைக்கப்பட்ட இத்திருத்தலம், பிற்காலத்தில் ('நவநீதம்' என்றால் 'வெண்ணை' ) 'திருவெண்ணெய்நல்லூர்' எனப்பெயர் மருவியதாக தலவரலாறு கூறுகிறது. பஞ்சகிருஷ்ணாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றான இத்திருக்கோயிலில் நம் பெருமாள், ஸ்ரீகிருஷ்ணராகவும் திருஅருட்காட்சியளிப்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும். நம் மஹாலக்ஷ்மிதேவி, தனி சன்னதியில் ஸ்ரீ ஜனகவல்லி தாயாராக அமர்ந்திருக்கும் திருக்கோலத்தில் அழகுற அருள்பாலிக்கின்றாள். (மற்றொரு சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கும் ஸ்ரீ ஆண்டாள் பேரழகு) முதலாம் ராஜராஜன், குலோத்துங்கசோழர், இரண்டாம் ராஜராஜன், கோபுர்சிங்கன், திருச்சிற்றம்பலம் உடையான், சுந்தரபாண்டிய பிரம்மராயன், காடவராயன் போன்ற மன்னர்களுடைய வரலாற்று கல்வெட்டுகள் காணப்படும் (அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள) இப்பழமைமிகு திருத்தலம், சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள. (கருடாழ்வார் இல்லாத மிகவும் பழமையான திருக்கோயில் என்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்) ஒரு வரலாற்று நிகழ்விபடி; நம் பெருமாள், அசுரர்களிடமிருந்து தன்னை எண்ணி தவமிருந்த தனது பக்தரான சௌண்டல்யி மகரிஷியை காத்திட, ஒரு புரட்டாசி மாத சனிக்கிழமை நாளில் வைகுண்டத்திலிருந்து இத்திருத்தலத்தில் எழுந்தருளி, அசுரர்களை அழித்து, மகரிஷிக்கு அருட்காட்சியளித்ததாக தலபுராணம் கூறுகிறது. முதலாம் ராஜராஜன், குலோத்துங்கசோழர், இரண்டாம் ராஜராஜன், கோபுர்சிங்கன், திருச்சிற்றம்பலம் உடையான், சுந்தரபாண்டிய பிரம்மராயன், காடவராயன் போன்ற மன்னர்களுடைய வரலாற்று கல்வெட்டுகள் காணப்படும் (அஹோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள) இப்பழமைமிகு திருத்தலம், சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள. நலமும், வளமும் சிறக்க நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams