Sri Kodanda Ramaswami Temple, Ayodhyapattanam
ஶ்ரீ கோதாண்ட ராமசுவாமி திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம்
Sthala Mahātmyam
This centuries-old Vaishnava temple at Ayodhyapattanam enshrines a rare vision: attended by Bharata, Lakshmana, Shatrughna, Angada, Sugriva and Sri Anjaneya, Sri Rama and Sita Devi are seated with one leg crossed over the other in regal majesty. Unusually, while Sita normally sits to Rama's right, here she graces His left, counted among the temple's specialities. By tradition, after the slaying of Ravana, while journeying to Ayodhya for the coronation, at the request of sage Bharadwaja and the prayer of Vibhishana, Lord Rama with Sita gave darshan in the pattabhishekam (coronation) form here, even before reaching Ayodhya, the temple's foremost glory. The sthala history holds that the divine couple stayed here three days. Because Rama first appeared in coronation form here before Ayodhya, the village is named Ayodhyapattanam. Recently well renovated and adorned with beautiful sculptures, the temple celebrates Rama Navami with special grandeur. Devotees worship the divine couple to regain lost position and influence and to strengthen marital harmony.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; நூற்றாண்டுகள் பல கடந்த இந்த பழமைமிகு வைணவ திருத்தலத்தின் கருவறையில், (பரதன், லட்சுமணன்,சத்ருக்னன், அங்கதன், சுக்ரீவன், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆகியோர் சேவித்திருக்க) காண்பதற்கு அரிதான திருக்கோலத்தில் ஸ்ரீ ராமரும், சீதாதேவியும் கால் மேல் கால்போட்டு ராஜ கம்பீத்துடன் அமர்ந்த நிலையில் அருட்காட்சியளிப்பதைக் காணப்பரவசம். (பொதுவாக, ஸ்ரீ ராமரின் வலதுபுறத்தில் எழுந்தருளும் நம் சீதாபிராட்டி, இத்திருத்தலத்தில் இடதுபுறம் வீற்றிருப்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும்) ஒரு புராண வரலாற்று நிகழ்விபடி; இராவண வதம் முடிந்து சீதையுடன் பட்டாபிஷேகம் காண அயோத்தி செல்லும் வழியில், பரத்வாஜ் முனிவரின் வேண்டுகோளின்படியும், விபீஷணரின் பிரார்த்தனையை ஏற்றும் நம் ஸ்ரீராமப்பெருமான் சீதாபிராட்டியுடன் (அயோத்திக்கு முன்னதாகவே) பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருட்காட்சியளித்தது இத்திருத்தலத்தில்தான் என்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும். (ஸ்ரீ ராமர் சீதாலட்சுமி தம்பதி மூன்று நாட்கள் இத்திருத்தலத்தில் தங்கிச்சென்றதாக தலவரலாறு கூறுகிறது) ஸ்ரீ ராமர், அயோத்திக்கு முன்பாக முதன்முதலில் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அருட்காட்சி தந்த தலமாதலால் இவ்வூருக்கு 'அயோத்தியாபட்டணம்' எனும் பெயராம். (உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான வைணவ திருத்தலத்தலங்களில், சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருக்கோவிலும் ஒன்று) சிற்ப வேலைப்பாடுகள் அற்புதமாக அமையப்பெற்ற இத்திருக்கோயிலில நடைபெறும் ராமநவமி விழா வெகு விசேஷமாம். இழந்த பதவி, சிறப்பு செல்வாக்குகள் மீண்டும் கிடைக்கப்பெறவும், தம்பதியர் கருத்தொற்றுமை மேன்மையுறவும் இத்தல இறை தம்பதியரை உளமார வழிபடுதல் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை). 🙏🏻ஓம் ஸ்ரீ ராமாய நமக: 🇮🇳👍🏻*பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்*!






