Sri Vanmutti Perumal (Srinivasa Perumal) Temple, Kozhikuthi
ஶ்ரீ வான்முட்டி பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Built during the reign of Kulothunga Chola III and recently renovated, this Vaishnava temple enshrines Sri Vanmutti Perumal, held to be over 1200 years old, standing 14 feet tall bearing a royal sceptre, and remarkably carved from a single athi (fig) wood. There is no separate shrine for the Thayar; Sri Dayalakshmi resides upon the Lord's right chest, while Sri Bhumadevi Thayar graces on the left, five feet tall in stone form. Uniquely, the Lord's feet rest upon a root, and the image is coated with Ajanta herbal color. As the Lord is of athi wood, no abhishekams or flower garlands are offered to him; only on the first day of each Tamil month is his vastra alankaram changed, all abhishekams being done to the utsavar. Legends tell that the Lord cured sage Pippilar's skin disease, absolved the sins of King Nirmalan, and removed the doshas of Thanjavur's King Serfoji. Worshipping him is said to equal worshipping Tirupati Srinivasa, Sholingur Yoga Narasimha and Kanchipuram Athi Varadaraja together. Thai Thiruvonam and Vaikunta Ekadasi are grandly celebrated.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; மூன்றாம் குலோத்துங்க சோழர் காலத்தில் கட்டப்பட்டு, சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இந்த வைணவ திருத்தலத்தின் கருவறையில், சுமார் 1200-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவராக, 14-அடி உயரமாக, அரசரின் செங்கோலுடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளித்திடும் *(ஒரே அத்தி மரத்தினால் வடிக்கப்பட்ட)* நம் வான்முட்டி பெருமாளின் திவ்ய தரிசனம் காணப்பரவசம். ( இத்திருத்தலத்தில், தாயாருக்கு என, தனி சன்னதி இல்லை) பெருமாளின் வலது திருமார்பில் 7-அங்குலத்தில் (5-ஆம் புகைப்பட பதிவு) ஸ்ரீ தயாலக்ஷ்மி தாயார் அருட்குடிகொண்டுள்ளார். இடதுபுறம் ஸ்ரீபூமாதேவி தாயார், 5-அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் சிலாரூபமாக அருள்பாலிக்கிறாள். உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத மிகவும் பழமைவாய்ந்த, 🤔🙏🏻 வேரே திருவடியை தாங்கும் அதிசயமான இத்தல அத்திமர பெருமாளுக்கு, அஜந்தா (மூலிகை) வர்ணம் சாற்றப்பட்டுள்ளது. (இத்தல இறைவன் அத்தி மரத்தால் ஆனவர் என்பதால், அவருக்கு புஷ்ப மாலை உட்பட, எந்தவிதமான அபிஷேகங்களும், கிடையாது. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் முதல்நாளில் மட்டும் வஸ்திர அலங்காரம் மாற்றப்படுமாம்) இத்திருத்தலத்தின் வான்முட்டி பெருமாளை உளமார தரிசிததிட, திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜப்பெருமாளையும் ஒன்றாக வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம். (அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் உற்சவருக்கே செய்யப்படுகிறது) சில வரலாற்று நிகழ்வுகளின்படி; நம் பெருமாள், பிப்பிலர் மகரிஷியின் தோல் நோயினை நீக்கி, திருக்காட்சி தந்த தலம். நிர்மலன் எனும் மன்னனின் (குற்றங்களை) பாவங்களை போக்கிடச்செய்து, ஒரு அத்தி மரத்தில் வானளாவிய பெருமாளாக தமிழ் தை மாதம், திருவோணம் நட்சத்திரத்தில் தரிசனம் தந்த தலம். தஞ்சை சரபோஜி மன்னரின் தோஷங்களை போக்கிடச்செய்த தலம். (முற்கால 'கோடிஹத்தி' எனும் பெயர்தான் மருவி, தற்காலத்தில் 'கோழிகுத்தி' என்றாகிவிட்டது என்கிறார்கள். 'சாபவிமோசனபுரம்' என்பதுதான் 'கோடிஹத்தியின்' பூர்வ பெயராம்) விக்ரகத்தினை தட்டினால், ஏழு இடங்களில் ஓசை எழுந்திடும் ' ஸ்ரீ சப்தஸ்வர ஆஞ்சநேயர்' இத்திருத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு பெற்றவராக திகழ்கின்றார். தை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் நடைபெறும் விழாவும், வைகுண்ட ஏகாதசி விழாவும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில், அருள்புரிந்திடும் அத்திமர பெருமாளை சனிக்கிழமை நாட்களில் உளமார வழிபட, கோடி ஹத்தி (குற்றங்கள்) குறைந்திடும் என்பதும், பிதுர்தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சனி தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் பல விலகும் என்பதும் சிறப்பு மிக்க இத்திருக்கோயிலின் மற்றுமொரு ஐதீகம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!* .






