Sri Lakshmi Narasimhar (Azhagiya Singar) Swamy Temple, Thiruvali
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் சுவாமி திருக்கோயில்
Sthala Mahātmyam
Hymned by Thirumangai Azhvar, this shrine at Thiruvali, together with Thirunagari five kilometres away, is revered as the 34th of the 108 Divya Desams. Built by the Cholas and renovated in the Nayak period, this Vaishnava temple, over 1,500 years old, enshrines beneath its Ashtakshara vimanam Sri Narasimha Perumal, seated with Sri Lakshmi Devi, her hands folded in worship, upon His lap. Uniquely, She is seated on His right thigh rather than the customary left, a rare darshan held foremost among the temple's specialities; worshipping this divine couple is said to grant the merit of visiting all five Narasimha sthalams. The utsavar, flanked by both consorts, is called Sri Thiruvali Nagaralan. Here the Lord whispered the Ashtakshara mantra into Thirumangai Azhvar's ear and accepted him; next to Badrikashram, this is where Perumal Himself imparted the Thirumantram, and so it is deemed equal to Badri. The Thai-Pournami Thirumangai Azhvar Mangalasasana Utsavam, monthly Swathi worship, and the ten-day Vaikasi-Swathi Brahmotsavam are its notable festivals.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; "திருவாலி தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாழி ஏவரி வெஞ்சிலையானுக் கென்னிலமை உரையாயே" என, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலமும் மற்றும் 5-k.m.தொலைவிலுள்ள திருநகரி எனும் தலமும் (ஒன்றாக) 108-திவ்ய தேசங்களில், 34-வது வைணவ திருத்தலங்களாக போற்றப்படுகின்றது. சோழர்களால் கட்டப்பட்டு, நாயக்கர்கள் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்ட சுமார் 1500-ஆண்டுகளுக்கும்மேல் பழமைவாய்ந்த இந்த வைணவ திருத்தலத்தின், அஷ்டாட்சர விமானத்தின் கீழே உள்ள கருவறையில் நம் நரசிம்ம பெருமாள், இருகரம்கூப்பி வணங்கிடும் ஸ்ரீ லக்ஷ்மிதேவியை தன் திருமடியில் இருத்தி, அமர்ந்த திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். (🤔🙏🏻 பெரும்பாலான ஆலயங்களில், பெருமாளின் இடது திருமடியில் அமர்ந்திருக்கும் லக்ஷ்மிதேவி, காண்பதற்கு அரிய திருக்காட்சியாக வலது திருமடியில் அமர்ந்திருப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்புகளில் முதன்மையானதாகும். இத்தல இறைதம்பதியரை தரிசித்திட, பஞச நரசிம்மர் தலங்களை வழிபட்ட பலன் கிட்டும் என்பது ஐதீகம்) தேவியர் இருவரும் இருபுறமும் உடனிருக்க, உற்சவர் பெருமாள் ஸ்ரீ திருவாலி நகராளன் எனும் திருநாமத்துடன் சேவைசாதிக்கிறார். நம் இறைவன், அஷ்டாட்சர மந்திரத்தை திருமங்கை மன்னரின் காதில் ஓதி, அவரை ஆட்கொண்ட தலம். பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக, பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசித்த தலம் என்பது மற்றொரு தலச்சிறப்பாகும். அதனாலேயே, இந்த வைணவ திருத்தலம் பத்ரிக்கு இணையாக கருதப்படுகின்றது. ஆண்டுதோறும் தை மாத பௌர்ணமி அன்று நடைபெறும் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசன உற்சவத்தின்போது, இத்தலத்தின் உற்சவர் கருட வாகனத்தில் புறப்பாடாகி திருமணிமாடக்கோயிலுக்கு எழுந்தருளும் நிகழ்வு, இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்புமிக்க விழாக்களில் ஒன்று. சுவாதி நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய இத்திருத்தலத்தில், (வளம் பெருக) மாதம்தோறும் வரும் சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடும், வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் 10-நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நிகழ்வும் வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






