Sri Adi Varaha Perumal Temple, Kumbakonam
ஶ்ரீ ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கும்பகோணம்
Sthala Mahātmyam
Located in the heart of the temple town of Kumbakonam, near the Sarangapani, Chakrapani and Adi Kumbeswarar temples, this small and ancient Vaishnava shrine enshrines the Lord in his Varaha (boar) avatar. Named Sri Adi Varahar, he grants darshan seating Sri Bhumadevi upon his left lap, while the Thayar, rescued by him from the netherworld (patala), worships him in gratitude. Before the Lord is a 'Varaha Salagramam' bearing conch and discus markings, which receives a daily milk abhishekam. Since Sri Varahar was enshrined here even before the Mahamaham festival arose in Kumbakonam, he is called Adi Varahar, the most ancient of all the Perumals here. During Masi Magam, five deities, Sarangapani, Chakrapani, Varadaraja, Rajagopalar and this temple's Lord, come to the Cauvery bank for the holy bath, a rare sight to behold. As the Lord who recovered the Earth, his daily artha-jama puja offers naivedyam mixed with tubers grown within the soil; devotees pray here for relief from land-related problems. Nearby, Ganapati graces as Sri Varaha Vinayakar, and the worship of Sri Santhana Krishna is offered for the blessing of healthy progeny.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; கோயில் நகரமான கும்பகோணத்தின் மையப் பகுதியில் (ஸ்ரீ சாரங்கபாணி, சக்கரபாணி, ஆதி கும்பேஸ்வரர் ஆலயங்களுக்கு அருகில்) அமைந்துள்ள, பழமை மிகு சற்றே சிறிய இந்த வைணவத் திருத்தலத்தின் கருவறையில் நம் பெருமாள், வராக அவதாரத்துடன் 'ஸ்ரீ ஆதி வராகர்' எனும் திருநாமம்கொண்டு தனது இடது திருமடியில் ஸ்ரீபூமாதேவியை அமர்த்திய கோலத்தில் அருட்காட்சியளித்திட, பாதாள உலகினுலிருந்து தன்னை மீட்டுவந்த சுவாமியை வணங்கியபடி பூமாதேவி தாயார் திருக்காட்சியளிக்கிறாள். (இறைவனுக்கு முன்பாக "வராக சாளக்கிராமம்" உள்ளது. இதில் சங்கு, சக்கர ரேகைகள் காணப்படுகின்றன. இதற்கு தினமும் பாலபிஷேகம் நடக்கிறது) கும்பகோணத்தில் மகாமகம் திருவிழா உண்டாவதற்கு முன்பாகவே ஸ்ரீ வராகர் இத்தலத்தில் எழுந்தருளியிருந்ததால், இவரை 'ஆதிவராகர்' என்றழைக்கின்றனர். (இவரே இங்குள்ள பெருமாள்களுக்கெல்லாம் முந்தியவராம்) உற்சவ வராகர் தம்பதி பேரழகு. மாசி மகத்திருவிழாவின்போது, கும்பகோணத்திலுள்ள ஸ்ரீ சாரங்கபாணி, ஶ்ரீ சக்கரபாணி, ஸ்ரீ வரதராஜர், ஸ்ரீ ராஜகோபலர் மற்றும் இத்தலத்து மூர்த்தி ஆகிய ஐவரும் காவிரிக்கரைக்கு தீர்த்த நீராட வரும் நிகழ்வு காண்பதற்கு அரிய பெரும் திருக்காட்சியாகும். (பூமியை மீட்டு வந்த பெருமாள் என்பதால்) இத்தலத்தின் இறைவனுக்கு, தினமும் நடைபெறும் அர்த்தஜாம பூஜையின்போது, பூமிக்குள் விளையும் கிழங்கு கலந்த நைவேத்தியம் படைக்கப்படுவது விசேஷம். (பூமி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல.தீர்வு காண, இத்தலத்து இறைவனை உளமார வழிபடுதல் நன்மை பயக்கும் என்பது நம்பிக்கை) ஆலயத்தின் அருகில் நம் கணபதி, ஸ்ரீ வராக விநாயகராக அருள்பாலிக்கிறார் நலமான குழந்தைப்பேறுக்கு நடைபெறும் ஸ்ரீசந்தான கிருஷ்ணர் வழிபாடு மற்றுமொரு தலவிசேஷம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*





