Sri Gopinatha Perumal Temple (Gopinatha Vinnagaram), Pazhaiyarai
ஶ்ரீ கோபிநாத பெருமாள் திருக்கோயில்
Sthala Mahātmyam
Situated in Pazhaiyarai, the celebrated town that served as the second capital of the Cholas, this ancient Vaishnava shrine once flourished as a great temple spread over two-and-a-half acres with seven rajagopurams, worshipped from the 9th to the 13th century. Now much dilapidated, it awaits renovation. Believed to predate Sundara Chola, father of Rajaraja Chola, the sanctum enshrines the Lord as Sri Gopinatha Perumal, standing east-facing with His consorts on either side, and is reckoned around 1,500 years old. A beautiful stucco depiction of Sri Rama, Vishnu and Krishna adorns the wall behind the moolavar. By tradition, this is the sthalam where Narayana revealed Himself as Krishna to Arjuna and as Rama to Hanuman. Bearing inscriptions of Kulothunga Chola III and Vijayanagara kings, and called 'Konapperumal Kovil' locally, the temple celebrates Sri Krishna Jayanthi with great fervour. With twin palms named Rama and Sita and twin Anjaneyars bearing thousand-petalled blooms, the savant U.Ve. Swaminatha Iyer hailed it as the 'Dwaraka of the South.'
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
( 🙏🏻சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; (திருப்பணிகள் செய்திட காத்திருக்கும் 🙏🏻மேன்மையானவர்களின் கனிவான கவனத்திற்கு); முற்கால, பிற்கால சோழர்களின் ஐந்து தலைநகரங்களில், இரண்டாவது தலைநகரமாக விளங்கிய பழையாறை எனும் சிறப்புமிக்க ஊரில், 9-ஆம் நூற்றாண்டு முதல், 13-ஆம் நூற்றாண்டுவரை, இரண்டரை ஏக்கர் பரப்பளவில் 7-ராஜ கோபுரங்களுடன் கூடிய பெரியகோவிலாக மிகச்சிறப்புடன் வழிபடப்பட்ட இத்திருத்தலம், தற்போது மிகவும் சிதிலமடைந்து தன் திருப்பணிகளை எதிர்நோக்கியுள்ளது. ராஜராஜ சோழரின் தந்தை சுந்தர சோழரின் காலத்திற்கும் முற்பட்டதாக கருதப்படும் இந்த வைணவ ஆலயத்தின் கருவறையில் நம் வேங்கடவன், சுமார் 1500-ஆண்டுகள் பழமையானவராக ஸ்ரீ கோபிநாத பெருமாள் எனும் திருநாமத்துடன் தேவியர் இருபுறமும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில், கிழக்கு நோக்கி அருட்காட்சியளிக்கிறார். (மூலவரின் பின்புறம் உள்ள சுவற்றில் உள்ள ஸ்ரீராமர், விஷ்ணு, கிருஷ்ணரின் ஸ்டக்கோ ஓவியம அழகு) ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; ஸ்ரீமன் நாராயணன், அர்ச்சுனருக்கு ஸ்ரீகிருஷ்ணராகவும், அனுமனுக்கு ஸ்ரீராமராகவும் அருட்காட்சியளித்த தலம் என்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும். மூன்றாம் குலோத்துங்க சோழர் மற்றும் விஜயநகர வம்சத்து மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படும் ("கோணப்பெருமாள் கோயில்" என, உள்ளூர் மக்களால் அழைக்கப்படும்) இத்திருத்தலம், வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான ஆலயங்களில் ஒன்றாகும். உள்ளூர் மக்களால், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள், வெகுவிசேஷமாக கொண்டாடப்படுகிறது. ராமர், சீதா எனும் பெயருடன் காலம் காலமாக நிற்கும் இரட்டை பனை மரங்கள், சஹஸ்ர தல மலரை ஏந்தியிருக்கும் இரட்டை ஆஞ்சநேயர்கள் என, சிறப்புக்கள் பல உள்ள இத்திருத்தலத்தினை, நம் தமிழ் தாத்தா உ.வே.சா (உ.வே.சாமிநாதையர்) "தென்னாட்டின் துவாரகை" என குறிப்பிட்டுள்ளார்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*


