Sri Lakshmi Narasimhar Temple, Pazhaya Seevaram
ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்
Sthala Mahātmyam
On the banks of the Palar river, this temple, over 500 years old and recently well renovated, enshrines Sri Lakshmi Narasimha Swamy, who grants darshan facing west, bearing the conch and discus, embracing Sri Lakshmi Devi with His left arm and seating her upon His lap. Ahobilavalli Thayar graces a separate sannidhi in a seated posture. According to a historical tradition, Sri Mahavishnu appeared here as the peaceful Santa Narasimha with Lakshmi on His lap at the prayer of the sage Atri Maharishi, a disciple of Vikhanasa. Near the temple, atop a small hill of 150 steps, stands an ancient little Shiva shrine. Worship on Swati nakshatra days is held to be beneficial, and those afflicted by chronic illnesses are advised to worship here with faith. Because the Lord dwells here with Sri Lakshmi, the place was once called 'Sripuram', later corrupted to 'Seevaram', and today, being an ancient settlement, it is known as Pazhaya Seevaram. Bearing early inscriptions, the temple celebrates Narasimha Jayanti and the Paar Vettai utsavam in the month of Thai as its famed grand festivals.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; பாலாற்றின் கரையோரம், சுமார் 500-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான, சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருத்தலத்தின் கருவறையில், தனது இடது கரத்தில் ஸ்ரீ லக்ஷ்மிதேவியை அணைத்து, மடியில் இருத்தியபடி, சங்கு சக்கரதாரியாய் மேற்கு நோக்கி அருட்காட்சியளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம சுவாமியை காணப்பரவசம். தனி சன்னதியில், அகோபிலவல்லி தாயார் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். ஒரு வரலாற்று நிகழ்வின்படி; ஸ்ரீ மஹாவிஷ்ணு, விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷியின் வேண்டுதலுக்காக ஸ்ரீலட்சுமி தாயாரை மடியில் இருத்தியபடி சாந்த நரசிம்மராக அருட்காட்சியளித்த இத்திருத்தலத்தின் அருகில்,150-படிகள் கொண்ட சிறு மலைக்குன்றின் மேலே பழைமையான சிறு சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது. சுவாதி நட்சத்திரத்திர நாட்களில் இத்தல இறைவனை தரிசனம் காண்பது நன்மை பயக்குமாம். (நாள்பட்ட நோய்களால் சிரமப்படுபவர்கள், நம்பிக்கையுடன் வழிபட வேண்டிய இறைவனாலயமாம்) ஸ்ரீலக்ஷ்மியுடன் இறைவன் வாசம்புரியும் தலமென்பதால், முற்காலத்தில் 'ஸ்ரீபுரம்' என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் 'சீவரம்' எனப்பெயர் மருவி, தற்காலத்தில் (பழமைவாய்ந்த ஊர் என்பதால்) பழைய சீவரம் என்றழைக்கப்படுகிறது. முற்கால கல்வெட்டுகள் காணப்படும் இத்திருத்தலத்தில், நரசிம்மர் ஜெயந்தி மற்றும் தை மாதம் நடைபெறும் பார் வேட்டை உற்சவ விழாக்கள் பிரசித்தி பெற்ற பெரும் திருவிழாக்காலங்களாகும்). 🙏🏻ஓம் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரே போற்றி! போற்றி! போற்றி! 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






