Sri Adimoola Narayana Perumal Temple, Vilangadu
ஶ்ரீ ஆதிமூல நாராயணப்பெருமாள் திருக்கோயில், விளாங்காடு
Sthala Mahātmyam
One of the renowned Vaishnava shrines of Kanchipuram district, this temple enshrines the divine couple Sri Adimoola Narayana, who, it is said, lay long buried within the earth and were recovered in recent times through the efforts of Ayyappa devotees. In ancient days the sage Bhukarba Maharishi is believed to have fashioned and worshipped the Lord's image here. This is revered as the Subhithyaranya Kshetram, where the Lord granted moksha to Gajendra the elephant. According to the sthala purana, it was here that the Lord expounded to the sages Narada and Bhrigu the transit of the planets, their benefic and malefic influences, and how the nine grahas bear upon human life. For this reason the temple is esteemed as a graha dosha nivarthi sthalam, a place that remedies planetary afflictions, and the Vaikunta Ekadasi festival celebrated here is held to be especially auspicious and grand.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைணவத்தலங்களுள் ஒன்றான இத்திருத்தலத்தின் கருவறையில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆதிமூல நாராயண தம்பதியர், பல காலங்களாக பூமியுனுள் இருந்து, சமீப காலத்தில், ஐயப்ப பக்தர்கள் மூலம் வெளியே கிடைக்கப்பெற்றவர்களாம். (ஆதிகாலத்தில், பூகர்ப மகரிஷி இத்தல இறைவனின் விக்ரகத்தை வடித்து வழிபட்டதாக கூறப்படுகிறது) கஜேந்திரனுக்கு, நம் பெருமாள் மோட்ஷம் அளித்த சுபித்யாரண்ய ஷேத்திரம் என்பது தலச்சிறப்பாகும் . இங்குதான் நாரதர் மற்றும் பிருகு முனிவருக்கு கோள்களின் கோச்சாரம் அவற்றின் சாதக பாதகங்கள் (மனித வாழ்வில் நவகிரகங்கள் எப்படி சம்பந்தப்பட்டு உள்ளன) என்பது பற்றி நம் இறைவன் போதித்ததாக தலபுராணம் கூறுகிறது. கிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலமாக போற்றப்படும் இத்திருத்தலத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விசேஷமாம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






