Sri Yoga Narasimha Swami (Azhagiya Singaperumal) Temple, Thiruvelukkai, Kanchipuram
ஶ்ரீ யோக நரசிம்ம சுவாமி (அழகிய சிங்கபெருமாள்) திருக்கோயில், திருவேளுக்கை
Sthala Mahātmyam
Glorified by Peyalvar in his mangalasasanam, this ancient temple at Thiruvelukkai is the 47th of the 108 Divya Desams. Peyalvar praised it on par with Kumbakonam Uppiliappan and Tirumala (Tirupati), a distinction counted among its glories. Built by the early Pallavas and reckoned over 2000 years old, the temple enshrines the Lord beneath the Kanaka Vimana as Sri Yoga Narasimha, seated in a serene santa-svarupa form of the much-revered Narasimha avataram. Thayar Amrutavalli (Velukkai Nachiyar) graces a separate shrine in a seated posture. The name derives from 'vel' (desire) and 'irukkai' (abode): by one puranic account the Lord willingly seated Himself here to guard Brahma's yaga, giving the place the name Thiruvelukkai. The utsavar is known as Sri Azhagiya Singar and Sri Mukunda Nayakan. A distinctive shrine for Sri Sudarshana Chakrathazhwar is another speciality. Little known to outside devotees, the temple lies about two kilometres from the Kanchipuram bus stand. All festivals dear to the divine couple are observed, and the Saturday worship for health and prosperity is the special thala visesham.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; "விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர் வேங்கடம் மண்ணகரம் மாமாட வேளுக்கை மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி தன் குடங்கை நீரேற்றான் தாழ்வு" என, பேயாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்திருத்தலம் 108-திவ்ய தேசங்களில், 47-வது வைணவத் திருத்தலமாகும். பேயாழ்வார், இத்திருத்தலத்தினை கும்பகோணம் உப்பிலியப்பன் மற்றும் திருப்பதி (திருமலை) தலங்களுக்கு இணையாக பாடியுள்ளது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும். முற்கால பல்லவர்களால் கட்டப்பட்ட, சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இத்திருத்தலத்தில், கனக விமானத்தின் கீழுள்ள கருவறையில், (நம் பெருமாளின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகின்ற அவதாரம் நரசிம்ம அவதாரம்) ஸ்ரீ யோக நரசிம்மராக அமர்ந்து சாந்த சொரூப திருக்கோலத்தில் அருட்காட்சியளிப்பதைக் காணப்பரவசம். தனி சன்னதியில், நம் தாயார் அமர்ந்த திருக்கோலத்தில் அழகு அருட்காட்சியளிக்கிறாள். 'வேள்' என்றால் விருப்பம். 'இருக்கை' என்றால் இருப்பிடம். (ஒரு புராண வரலாற்று நிகழ்விபடி;) ஸ்ரீ பிரம்மாவின் யாகத்தை காத்திட, நம் இறைவன் தாமே விரும்பி அமர்ந்த இடம் என்பதால், இத்திருத்தலம் *திருவேளுக்கை* என்றழைக்கப்படுகிறது. இத்திருத்தலத்தின் உற்சவர் பெருமாள் ஸ்ரீஅழகிய சிங்கர், ஸ்ரீ முகுந்த நாயகன் எனும் பல திருப்பெயர்களில் அழைக்கப்படுகின்றார். மற்றொரு தனி சன்னதியில் அருள்புரிந்திடும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் வழிபாடு மற்றுமொரு தலச்சிறப்பாகும். (உள்ளூர் மக்களை தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான வைணவ திருத்தலத்தலங்களில் ஒன்றான இத்திருக்கோயில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது) நம் பெருமாள் தம்பதியருக்கு உகந்த அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் நலம் சிறக்க, வளம் செழிக்க நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு தலவிசேஷம்). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻*பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






