🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Kanchipuram

Sri Vijayaraghava Perumal Temple, Thiruputkuzhi

ஶ்ரீ விஜயராகவப்பெருமாள் திருக்கோயில்

Perumāḷ (Moolavar)Sri Vijayaraghava Perumal
ThāyārSri Marakathavalli Thayar
LocationThiruputkuzhi (Thiruppulkuzhi), Palur Chetti Sathiram, Kanchipuram, Tamil Nadu

Sthala Mahātmyam

Sung by Thirumangai Azhwar, Thiruputkuzhi is the 58th of the 108 Divya Desams. Over 2000 years old, beneath the Vijayakodi Vimana, the moolavar graces in the rare posture of performing funeral rites, with the bird Jatayu resting upon his thigh. Unusually, whereas the Goddess normally stands to the Lord's left, here, as only at Thiruvidavendhai, she is on his right. The utsavar graces with Sridevi and Bhudevi, and Saturday worship is the sthala special. This temple is celebrated for the honor it gives to Jatayu: whenever the Lord sets out in procession, Jatayu too receives full honors, and because Jatayu's last rites were performed here, the flag-staff and bali-peeta stand outside the temple. Marakathavalli Thayar gives darshan seated in a separate shrine, and the temple bears many inscriptions. The name means 'Thiru' (respect), 'Pul' (the bird Jatayu) and 'Kuzhi' (performing last rites). As Sri Rama himself granted Jatayu moksha and performed its rites here, beside the Jatayu Theertham he created, this is esteemed among the foremost places for offering tharpanam to one's ancestors.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; "அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பர் கழியுமாலென்னுள்ளம் மென்னும் புலங்கெழு பொருநீர் புட்குழி பாடும்போதுமோ நீர்மலைக்கென்னும்..." எனத்தொடரும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் 108-திவ்ய தேசங்களில், 58-ஆவது திருத்தலமாகும். சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த வைணவ ஆலயத்தில் விஜயகோடி விமானத்தின் கீழுள்ள கருவறையில், மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு சடங்குகள் செய்யும் பாவனையில் அருட்காட்சிதருகிறார். (பொதுவாக, இறைவனின் இடது பக்கத்தில் இருக்கும் இறைவி, வலது பக்கத்தில் இருப்பது இங்கும் திருவிடவெந்தை ஆலயத்திலும் மட்டுமே) நலமும், வளமும் சிறக்க ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கும் உற்சவருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு தலவிசேஷம். 'ஜடாயு' என்ற பறவைக்கு சிறப்பு சேர்த்த தலம் என்பது இத்தலத்தின் சிறப்பாகும். (நம் பெருமாள், திருவீதி உலா புறப்படும்போதெல்லாம் ஜடாயுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால், அதற்கு மரியாதை செய்யும் விதமாக கொடிமரமும், பலிபீடமும் கோயிலுக்கு வெளியே உள்ளது) ஏராளமான கல்வெட்டுகள் உள்ள இத்தலத்தின் தனி சன்னதியிலும், தாயார் அமர்ந்த கோலத்தில் திருக்காட்சியளிக்கிறாள். ( 'திரு' என்றால் மரியாதை, 'புள்' என்றால் (பறவை) ஜடாயு, 'குழி' என்றால் ஈமக்கிரியை செய்தல்) ஒரு புராண வரலாற்று நிகழ்வின்படி; (இராமாயணத்தில்) ஸ்ரீ ராமபிரான், ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச்சடங்குகளை இத்தலத்தில் செய்ததால், 'திருபுள்குழி' எனும் பெயர் ஆனதாகவும், காலப்போக்கில் அப்பெயர் மருவி 'திருப்புட்குழி' என்றழைக்கப்படுவதாகவும் தலவரலாறு கூறுகிறது. (சென்னை to வேலூர், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், காஞ்சிபுரத்திலிருந்து 14-k.m.தொலைவில் உள்ள இத்தலத்தின் முன்னே அமைந்துள்ள ஸ்ரீராமர் உருவாக்கிய தீர்த்தத்தின் பெயர் ஜடாயு தீர்த்தம்) ஸ்ரீராமபிரானே இங்கு ஜடாயுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால், முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams