Sri Parimala Ranganathar Swamy Temple, Sengalipuram
ஶ்ரீ பரிமள ரங்கநாதர் சுவாமி திருக்கோயில்
Sthala Mahātmyam
This very ancient Vaishnava shrine at Sengalipuram enshrines Thirumal reclining on His side, resting His head upon one hand, with His two consorts seated beside Him. It is said the Lord rests His head on His hand because it is improper to lie with the head directly upon the earth. Unlike the usual sayana Perumal who faces the sky, here the Lord uniquely reveals His full form, including His sacred face, to devotees while reclining on His side, foremost among the temple's specialities. He is worshipped as the Lord who removes six kinds of afflictions: apasmaram (epilepsy), naga dosham, putra dosham, kali dosham, pithru dosham and mental unrest. Reclining yet gazing upon those who seek Him, He is called the 'Perumal who grants all prosperity.' Recently renovated, the temple is revered as a Swayam Vyakta Kshetram (self-manifested shrine). Once known by names such as Swayam Kalikarapuram, Pullakavanam and Singalapuram, the village later became Sengalipuram. Vaikunta Ekadasi is celebrated here as its grand festival.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்: இந்த பழமைமிகு வைணவ திருத்தலத்தின் கருவறையில் நம் திருமால், தேவியர் இருவரும் அருகில் அமர்ந்திருக்க, தனது ஒரு திருக்கரத்தின் மீது தலையை வைத்து ஒருக்களித்து படுத்திருக்கும் நிலையில் அருட்காட்சியளிக்கிறார். (பூமியின் மீது நேரடியாக தலையை வைத்துக்கொண்டு படுக்கலாகாது என்பது ஒரு நெறிமுறை என்பதாலேயே, இறைவன் தனது கரத்தின் மீது தலையை வைத்துள்ளாராம்) பொதுவாக, வைணவ ஆலயங்களில் சயன திருக்கோலத்தில் ஆகாயத்தை நோக்கியவாறு காட்சிதரும் பெருமாள், இந்த பழமைமிகு திருத்தலத்தில் காண்பதற்கு அரிய திருக்கோலமாக தனது திருமுகம் உட்பட முழு சரீரத்தையும் பக்தர்களுக்கு காட்டி (ஒருக்களித்த நிலையில்) சயனித்திருப்பது தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும். ( இத்திருத்தலத்தில் அருட்குடி கொண்டிருக்கும் நம் வேங்கடவன், 'அபஸ்மாரம்' (காக்காய் வலிப்பு), 'நாக தோஷம்', 'புத்ர தோஷம்', 'கலி தோஷம்' 'பித்ரு தோஷம்' 'மனக்கலக்கம்' என, ஆறுவகையான இடர்களின் தாக்கம் போக்கிடும் இறைவனாக வழிபடப்படுகின்றார்) சயனக்கோலத்தில், தன்னை நாடிவரும் பக்தர்களை பார்த்தவாறு அபூர்வமான திருக்கோலத்தில் அருளிடும் இத்திருத்தல இறைவனை, "அனைத்து வளங்களும் அருளிடும் பெருமாள்" என்றழைக்கிறார்கள். உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத மிகவும் பழமைவாய்ந்த வைணவத் திருத்தலங்களில் ஒன்றான இத்திருக்கோயிலில், திருமண வரம் அருளும் உற்சவர் தம்பதியர் பேரழகு. சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருக்கோயில், ஒரு 'ஸ்வயம் வியக்த ஷேத்திரம்' என்பது தலச்சிறப்புக்களில் ஒன்றாகும். ( ஸ்வய வியக்தம்' என்றால் சுயமாக வெளிப்படுதல்) எனக்கூறுவர். (இத்திருத்தலம் உட்பட ஏராளமான சைவ, வைணவ, அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ள இவ்வூரின் பெயர் முற்காலங்களில், 'ஸ்வயம் கலிகரபுரம்', 'புல்லகாவனம்', 'திருக்கலீஸ்வரம்', 'சிவகலிபுரம்', 'சிங்கலாபுரம்', 'ஜயசிங்க குலகாலபுரம்' என்றெல்லாம் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் அப்பெயர்கள் மருவி, தற்போதைய சேங்காலிபுரம் என்றானதாம்) பெருமாளுக்கு உகந்த அத்தனை விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்தலத்தில், வைகுண்ட ஏகாதசி நிகழ்வு பெரும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக; 🇮🇳🙏🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






