🙏 Śrīmate Rāmānujāya Namaḥ — Garuda Seva, a non-profit Śrī Vaiṣṇava community & resource platform.
Salem

Sri Vetraya Perumal (Vettairaya Perumal) Temple, Sorakai Hill

ஶ்ரீ வேட்ராய பெருமாள் திருக்கோயில்

Perumāḷ (Moolavar)Sri Vetraya Perumal (Vettairaya Perumal)
LocationPeriya Sorakai (Sorakai hillock), Mettur (Nangavalli), Salem, Tamil Nadu

Sthala Mahātmyam

Perched atop a small, verdant hillock near the village of Periya Sorakai, this beautiful little temple enshrines Sri Vengadavan as Sri Vetraya Perumal. About 300 years old, the Lord graces in a standing posture depicting him setting out for the hunt (vettai). Little known to devotees from outside and familiar mostly to local people, the temple is believed to have been built during the era of the Rayar-dynasty kings who once ruled Mazhavar Nadu. The somewhat rugged hill path can be carefully traversed by two-wheelers and small four-wheelers to reach and behold the hilltop Lord; the shrine may also be approached by the road running from Tharamangalam to Nangavalli. The hillock temple is open only on Saturdays, from morning until noon, and during the Saturdays of the Purattasi month it takes on a grand festive splendor.

தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)

(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; பெரிய சோரகை எனும் கிராமத்தின் அருகே, பசுமை சூழ்ந்த சிறு மலைக்குன்றின் மேல் அமைந்துள்ள அழகிய சிறு ஆலயத்தினுள் நம் வேங்கடவன், ஸ்ரீ வேட்ராய பெருமாள் எனும் திருநாமத்துடன் சுமார் 300-ஆண்டுகள் பழமையானவராக நின்ற (வேட்டைக்கு செல்லும் அமைப்பு) திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். (உள்ளூர் மக்களை தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான ஆலயங்களில் ஒன்றான இத்திருத்தலம், முற்காலத்தில் மழவர் நாட்டினை ஆண்ட ராயர் குல அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலாகவும் கருதப்படுகிறது) இரு சக்கர வாகனங்கள், சிறிய நான்குசக்கர வாகனங்கள் செல்ல ஏதுவான (சற்றே கரடுமுரடான) மலைப்பாதையில் கவனமாக பயணித்தால் இம்மலைக்குன்று இறைவனை தரிசனம் காணலாம். ( இம்மலைக்குன்று ஆலயத்திற்கு, தாரமங்கலத்திலிருந்து, நங்கவள்ளி செல்லும் சாலையிலும் செல்லலாம்) ஒவ்வொரு சனிக்கிழமை நாட்களில் (காலை முதல் மதியம் நேரம் வரை மட்டும்) திறந்திருக்கும் இம்மலைக்குன்று ஆலயம், புரட்டாசி மாத சனிக்கிழமை நாட்களில் பெரும் திருவிழாக்கோலம் காண்கிறது). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*

Gallery

Photographs documented by devotees during their pilgrimage.

← All Other Divya Desams