Sri Varam Tharum Perumal Temple, Thachanallur
ஶ்ரீ வரம் தரும் பெருமாள் திருக்கோயில், தச்சநல்லூர்
Sthala Mahātmyam
Believed to be around 700 years old, this Vaishnava temple enshrines Lord Thirumal with His two consorts in the sanctum under the unusual and endearing name Sri Varam Tharum Perumal ('the Lord who grants boons'). Uniquely, the utsavar couple stand in front, with the slightly larger moolavar standing gracefully behind them. Venerated as the Lord who removes obstacles to marriage, the shrine has for generations been affectionately called 'Varam Tharum Perumal Koyil' by devotees. Its last kumbabhishekam was in 1891; after 126 years, following renovation, it was reconsecrated in 2017. An inscription records that the area was called Thachanur in 1232, and that the temple received renovations from Sundara Pandiyan, Kulasekara Pandiyan and Thirumalai Nayakkar in the 16th century, from King Marthanda Varman in 1734, and later from the ruler of Vallabha Mangalam. Though little known beyond the locality, its Margazhi Vaikunta Ekadasi and Purattasi Garuda Seva draw enthusiastic crowds from Tirunelveli city and surrounding villages. Devotees hold the firm faith that Varam Tharum Perumal will surely fulfil any just and heartfelt prayer.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
🇮🇳🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; சுமார் 700-ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த வைணவ திருத்தலத்தின் கருவறையில் தேவியர் இருவருடன் அருட்காட்சியளிக்கும் நம் திருமால், ஸ்ரீ வரம் தரும் பெருமாள் எனும் வித்தியாசமான திருப்பெயர்கொண்டிருப்பது ஆச்சரியம்! இத்திருத்தலத்தில், உற்சவர் தம்பதியரின் விக்ரகம் முன்னிருக்க, பின்னே மூலவர் சற்றே பெரியவராக நின்ற திருக்கோலத்தில் அழகுற அருட்காட்சியளிக்கிறார். ( திருமண தடைகளை நீக்கும் இறைவனாக வணங்கப்படும் இந்த பெருமாளின் திருக்கோயிலை, "வரம் தரும் பெருமாள் கோயில்" என்றே பக்தர்களால் காலம் காலமாக அழைக்கப்படுகிறதாம்) கடைசியாக 1891-ஆம் வருடம் கும்பாபிஷேகம் கண்ட இத்திருத்தலம், 126-வருடங்களுக்குப்பிறகு சிறப்பாக திருப்பணிகள் செய்திடப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேக விழா கண்டது. (1232-ஆண்டு இப்பகுதி தச்சனூர் என்றழைக்கப்பட்டதாகவும், 16-ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியர், குலசேகர பாண்டியர், திருமலை நாயக்கர்,1734-ஆண்டு மார்த்தாண்ட வர்மன் என்ற அரசராலும் பின்னர் வல்லப மங்களத்து அரசராலும் இத்திருக்கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டதாக கல்வெட்டு ஒன்று கூறுகிறது) உள்ளூர் மக்களை தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்றான இவ்வாலயத்தின் பெருமாளுக்கு நடைபெறும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நிகழ்வும், புரட்டாசி மாத கருடசேவை நிகழ்வும் திருநெல்வேலி மாநகரம் மட்டுல்லாமல் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரும்பாலான ஊர் மக்கள் உற்சாகமாக கலந்து கொண்டாடிடும் பெரும் திருவிழாக்காலங்களாகும். இத்திருத்தலத்தின் வரம் தரும் பெருமாள், நியாயமான வேண்டுதல் எதுவாயினும், உளமார வழிபட, நிச்சயம் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் தீரா நம்பிக்கை). 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*






