Sri Veera Narasimha Perumal Temple (Thanjai Mamani Koyil), Thanjavur
ஶ்ரீ வீர நரசிம்ம பெருமாள் திருக்கோயில் (தஞ்சை மாமணிக்கோயில்), தஞ்சாவூர்
Sthala Mahātmyam
Sanctified by the mangalasasanam of Thirumangai Azhwar, this temple is the 20th of the 108 Divya Desams. The three azhwars, Bhoothathazhwar, Nammazhwar and Thirumangai Azhwar, praised three shrines together, Manikundra Perumal, Neelamega Perumal and this Narasimha Perumal, as a single Divya Desam, and hence all three are called 'Thanjai Mamani Koyil'. Built by the Cholas and counted among the 88 temples of the Thanjavur palace devasthanam, this ancient Vaishnava shrine enshrines the Lord as Sri Veera Narasimhar, seated with his consorts on either side. Usually Narasimhar is seen alone or with Lakshmi upon his lap; but the rare darshan here of Narasimhar with Sridevi and Bhudevi is the foremost specialty of this kshetram. Only thaila-kaappu is applied to the moolavar, while all thirumanjana abhishekams are offered to the utsavar Sri Narayanar. The special worship offered to Narasimhar during pradosha time is another specialty, for it is believed that any just prayer made then is surely fulfilled. Continuous Brahmotsavam across Panguni, Chithirai and Vaikasi, and the 18-Garuda Sevai festival in Vaikasi, are cherished observances.
தல வரலாறு & சிறப்புகள் (original Tamil)
(🙏🏻 சிறப்புக்கள் பல பெற்ற இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்; "எம்பிராணெந்தை யென்னுடைச்சுற்றம் எனக்கர சென்னுடை வாணாள் அம்பினாலரக்கர் வெருகொள நெருக்கி அவருயிர் செகுந்தவெம் மண்ணல் வம்புலாஞ்சோலை மாமதில் தஞ்சை மாமணிக்கோயிலே வணங்கி நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்" என, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் 108-திவ்ய தேசங்களில், 20-வது திருத்தலமாகும். (பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் என மூவரும், 1.மணிகுன்றப்பெருமாள் கோவில், 2.நீலமேகப்பெருமாள்கோவில் மற்றும் இந்த 3.நரசிம்ம பெருமாள் கோவில் என, மூன்று தலங்களையும் ஒரே திவ்யதேச தலமாக கருதி போற்றி பாடியுள்ளனர். அதனாலேயே இம்மூன்று தலங்களும் "தஞ்சை மாமணிக்கோயில்" என்றழைக்கப்படுகிறது) சோழர்களால் கட்டப்பட்ட, (தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88-ஆலயங்களில் ஒன்றான) இந்த பழமைமிகு வைணவ திருத்தலத்தின் கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ வீர நரசிம்மராக தேவியர் இருபுறமும் உடனிருக்க அமர்ந்த நிலையில் அருட்காட்சியளிக்கிறார். பொதுவாக, நரசிம்மர் தனித்து இருப்பார். அல்லது ஸ்ரீ லக்ஷ்மி தாயாரை மடியில் இருத்தியவராக அருட்காட்சியளிப்பார். ஆனால், காண்பதற்கு அரிய திருக்காட்சியாக இத்திருத்தலத்தில், *ஸ்ரீ தேவி, பூதேவியருடன்* (இறைவன், *நரசிம்மராக*) *அருட்காட்சியளிப்பது* தலச்சிறப்புக்களில் முதன்மையானதாகும். (இவருக்கு தைலகாப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் அனைத்தும் உற்சவரான ஸ்ரீ நாரயணருக்கே நடக்கிறது) *பிரதோஷ காலத்தில்* இத்தல *நரசிம்மருக்கு* நடைபெறும் *விசேஷ வழிபாடு* தலச்சிறப்புக்களில் ஒன்றாகும். (பிரதோஷ வேளையில் வீர நரசிம்மரை வழிபட்டால், (நியாயமான) வேண்டுதல் எதுவாயினும் அது நிச்சயம் நடந்தேறிடும் என்பது தல ஐதீகம்) பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்களில், (மூன்று பெருமாள்களுக்கும்) தொடர்ந்து பிரம்மோற்சவம் நடப்பதும், வைகாசியில் 18-கருடசேவை திருவிழா நடப்பதும் தலவிசேஷங்களாகும். 🙏🏻ஓம் நமோ நாராயணாய நமக: 🇮🇳👍🏻 *பாரத நாடு* *பழம்பெரும் நாடு!* *நீரதன் புதல்வர்!* *இந்நினைவகற்றாதீர்!*





